அமெரிக்கர்களுக்கு அடுத்த‌ 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் - ட்ரம்ப்  

அமெரிக்கர்களுக்கு அடுத்த‌ 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் - ட்ரம்ப்  
அமெரிக்கர்களுக்கு அடுத்த‌ 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் - ட்ரம்ப்   

அமெரிக்கர்களுக்கு அடுத்த 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,4000க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக வைரஸ் உருவான சீனாவை விட அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது.

 அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வைரஸ் தொற்றின் மையாக மாறியுள்ளது. அங்கு செயற்கை சுவாசக்கருவிகளுக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 17ஆயிரம் செயற்கை சுவாசக்கருவிகளை சீனாவில் இருந்து பெற அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. மேலும் நியூயார்க்கில் மருத்துவமனைகளிலும் போதிய இடமில்லா சூழல் ஏற்பட்டுள்ளதால், சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி FEMA என்னும் அவசர நிலை மேலாண்மை நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை நியூயார்க் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

 கொரோனா தொற்றால் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தி அமெரிக்க மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.மிகவும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவிற்கு அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் வலி மிகுந்தவையாக இருக்கும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அமெரிக்கர்களுக்கு இது வாழ்வா சாவா தருணம் என்பதால் ஏப்ரல் மாத இறுதி வரை சமூக விலகலை கட்‌டாயம் கடைபிடிக்க வேண்டும் என அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளார். இல்லையேல் அமெரிக்கர்கள் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com