கொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்கையை இந்தியா வெளியிடுவதில்லை - ட்ரம்ப்

கொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்கையை இந்தியா வெளியிடுவதில்லை - ட்ரம்ப்
கொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்கையை இந்தியா வெளியிடுவதில்லை - ட்ரம்ப்

இந்தியாவில் எத்தனை கொரோனா உயிரிழப்புகள் என யாருக்கும் தெரியாது, அவர்கள் நேரடி எண்ணிக்கையை கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 

நவம்பர் மாதத்தில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடைபெறும். இதன்படி, முதலாவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. 

விவாதத்தின் போது நடந்த ஒரு உரையாடலில் ஜோ பைடன் கூறுகையில், கொரோனா உயிரிழப்பில் மற்ற உலக நாடுகளை விட அமெரிக்கா மோசமான நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் கொடுத்த ட்ரம்ப், 'அது சீனாவின் தவறு; சீனாவிலோ, இந்தியாவிலோ எத்தனை கொரோனா உயிரிழப்புகள் என யாருக்கும் தெரியாது, அவர்கள் நேரடி எண்ணிக்கையை கொடுப்பதில்லை' என்று பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com