கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறாரா அதிபர் ட்ரம்ப்..?
அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் இன்று கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் மீண்டும் அதிபரான பின் அமெரிக்க அரசின் செலவுகளை வெகுவாக குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கல்வித்துறையையும் கலைக்க அவர் முடிவு செய்துள்ளார். எதிர்த்தரப்பின் தாராளவாத சித்தாந்தத்தால் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துறையால் நாட்டுக்கு பயன் ஏதும் இல்லை என்று ட்ரம்ப் கடந்த காலங்களில் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் கல்வித்துறை கலைக்கப்பட உள்ளது. கல்வி தொடர்பான சேவைகளை இனி அந்தந்த மாநிலங்களே வழங்கும் எனத் தெரிகிறது. ஆனால், இது அமெரிக்காவில் கல்வியில் பெரியஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என பெற்றோர் தரப்பில் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.