உலகம்
கத்தார் விவகாரத்துக்கு நான் தான் காரணம்: டிரம்ப்
கத்தார் விவகாரத்துக்கு நான் தான் காரணம்: டிரம்ப்
வளைகுடா நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு தமது அழுத்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் தாம் மேற்கொண்ட சுற்றுப் பயணத்துக்கு பலன் கிடைத்திருப்பதாகவும் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தபோது, பயங்கரவாதத்துக்கு கத்தார் உதவி செய்வதாக தம்மிடம் கூறப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கத்தார் தரப்பிலோ, வேறு வளைகுடா நாடுகள் சார்பிலோ எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.