அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு ட்ரம்பி்ன் ஆலோசகராக அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தத் தகவலை ட்ரம்பின் செய்தித்தொடர்பார் கெல்லியானே கான்வே உறுதி செய்துள்ளார். ட்ரம்பின் மகள் இவன்காவின் கணவரான ஜேரட் குஷ்னர், உள் மற்றும் வெளிநாடு விவகாரங்களுக்கான கொள்கைகளை வகுப்பதில் புதிய அதிபருக்கு உதவியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, உறவினருக்கு அரசாங்கப் பதவிகளை வழங்குவது தொடர்பாக உள்ள விதிகள் ட்ரம்பிற்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும், அதிபர் மாளிகை தொடர்பான பணிகளுக்கு இத்தகைய விதிகள் பொருந்தாது என ட்ரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.