அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் !

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் !

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் !

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இணையத்தில் எங்கு நோக்கினும் பிரபலமாய் தென்பட்ட டிக்டாக், தற்சமயம் திரும்பும் திசையெங்கிலும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது சீனாவுக்கு பெரும் இழப்பாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவும் அதன்மீது கடும் அழுத்ததை கொடுத்து வந்தது.

டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்க அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தலையசைத்த அதிபர் ட்ரம்ப், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் முடிந்தாக வேண்டும் என்றும் இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அவர் உறுதிப்பட அறிவித்தார்.

இதனைக் கேட்டு கொதித்துப்போன சீனா, சீன தொழில்நுட்ப நிறுவனம் திருடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை செய்ய முயற்சிக்கும் ட்ரம்பின் அரசுக்கு பதிலடி கொடுக்க நிறைய வழிகள் உள்ளன என்றும் கூறியுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட திருட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் சீனா கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

இது குறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் " சீனாவுக்கு சொந்தமான செயலிகளின் பயன்பாடு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. டிக்-டாக்கின் தரவு சேகரிப்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கவும் சீனாவை அனுமதிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com