வலுக்கும் போராட்டம் | ”எலான் மஸ்க்கையும் என்னையும் பிரிக்க முடியாது” - அதிபர் ட்ரம்ப் பேச்சு!
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப்பும் மஸ்க்கும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய ட்ரம்ப், "எனக்கு கிடைக்கும் 98 விழுக்காடு விளம்பரம் எதிர்மறையானதுதான். ஆனால் அதைதான் விரும்புகிறேன். எலான் மஸ்க்கிடம் இருந்து, நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பது மக்களுக்கு தெரியும். அவர்கள் புத்திசாலிகள். இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், ”நான் ட்ரம்ப் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் புகழ்ந்துகொண்ட நிலையில், அண்ணன், தம்பியை பேட்டி எடுப்பதுபோல் இந்த கலந்துரையாடல் இருந்ததாக நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த செய்தியாளர் ஷான் ஹானிடி தெரிவித்தார். தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு வானளாவிய அதிகாரங்களுடன் அரசுப் பதவி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது நடவடிக்கைகள் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச்செல்லும் என்றும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பேட்டி வெளியாகியிருந்தது.