donald trump praises on prime minister modi
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்pt web

”மோடி என் சிறந்த நண்பர்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
Published on

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். இதில் வரிவிதிப்பும் ஒன்று. ஆனால், எந்த நாட்டுக்கும் பாரபட்சம் காட்டாமல் அதிரடி நடவடிக்கை காட்டி வருகிறார். இந்தியாவுக்கும் வரிவிதிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

donald trump praises on prime minister modi
ட்ரம்ப் - மோடிமுகநூல்

இந்த நிலையில், ”பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர்” என அவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ”உங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்து சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் என் நண்பர். பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் மிகவும் நல்ல நண்பர்கள். உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது. அதேநேரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக செயல்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ட்ரம்புவை, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

donald trump praises on prime minister modi
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. சந்திக்க விருப்பம் தெரிவித்த ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com