Donald Trump plans to put his photo on limited edition US passports
us passport, trumpx page

’எங்கும் நான்; எதிலும் நான்..’ பாஸ்போர்ட்டிலும் ட்ரம்ப் புகைப்படம்.. US-இல் மாறும் வரலாறு!

தற்போதைய அமெரிக்க பாஸ்போர்ட்களில் சுதந்திர தேவி சிலை மற்றும் நிலவில் கால் பதித்த வரலாற்று நிகழ்வின் படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புகைப்படம் இடம்பெற்ற சிறப்பு பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட உள்ளன. 250ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இந்த சிறப்பு கடவுச்சீட்டுகள் வெளியிடப்படுகின்றன.

அமெரிக்காவில் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிள் ஈடுபட்டு வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரி விதிப்பு, விசா, போர், அதிபர் கைது என அவற்றில் அடக்கம். இதனால் அவருக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில், டாலர் நோட்டுகளில் தனது கையெழுத்தை இடம்பெறச் செய்யும் முடிவை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புகைப்படம் இடம்பெற்ற சிறப்பு பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட உள்ளன. 250ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இந்த சிறப்பு கடவுச்சீட்டுகள் வெளியிடப்படுகின்றன.

Donald Trump plans to put his photo on limited edition US passports

அதன்படி, இந்த பாஸ்போர்ட்டின் உட்புறப் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் மற்றும் அவருடைய கையெழுத்து தங்க நிறத்தில் இடம்பெற்றிருக்கும். இது ஒரு லிமிடெட் எடிஷன் என்பதால், அமெரிக்காவின் வாஷிங்டன் பாஸ்போர்ட் முகமையில் நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், இந்த சிறப்பு வடிவமைப்பிற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாஸ்போர்ட்டுகள் வரும் ஜூலை 2026 முதல் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு மாற்றானது அல்ல, ஒரு நினைவுப் பதிப்பாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Donald Trump plans to put his photo on limited edition US passports
"இனி நல்லவனாக இருக்க முடியாது"- ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

இந்த முடிவிற்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய அடையாளச் சின்னங்களில் அதிபர் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிப்பதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன் அமெரிக்க பாஸ்போர்ட்டுகளில் பதவியில் இருக்கும் அதிபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றது கிடையாது.

Donald Trump plans to put his photo on limited edition US passports

பொதுவாக, வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்களே இடம்பெறும். இந்த நடைமுறையை மாற்றி, முதல்முறையாக ஓர் அதிபரின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் இடம்பெறுகிறது. தற்போதைய அமெரிக்க பாஸ்போர்ட்களில் சுதந்திர தேவி சிலை மற்றும் நிலவில் கால் பதித்த வரலாற்று நிகழ்வின் படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Donald Trump plans to put his photo on limited edition US passports
ஈரான் அமெரிக்க போர் | ”ட்ரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்.?” - ஜே.டி. வான்ஸ் கவலை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com