ஸ்பெயின் கேட்டலோனியா தனிநாடு வாக்கெடுப்பு: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு

ஸ்பெயின் கேட்டலோனியா தனிநாடு வாக்கெடுப்பு: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
ஸ்பெயின் கேட்டலோனியா தனிநாடு வாக்கெடுப்பு: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு

தனி நாடு கோரும் கேட்டலோனியாவுக்கான வாக்கெடுப்பு நடத்த அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பும், ஸ்பெயின் பிரதமர் ரஜோயும் கடும்‌ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனிய‌வை தனி நாடாக பி‌ரிப்பதற்கான வாக்கெடுப்பு இந்த வார இறுதியில் நடத்தப்படவுள்ளது. இதற்கு ஸ்பெயின் அரசும், அந்நாட்டின் நீதிமன்றமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது வாக்கெடுப்பு நடத்து‌தற்கான வாக்குச்சாவடிகளை கைப்பற்றும்படி‌ காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் ஸ்பெயின் பிரதமர் ரஜோயுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனி நாடு கோரி நடத்தப்படும் வாக்கெடுப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேட்டலோனியா மக்கள் இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்து ஸ்பெயினின் ஒற்றுமையை நிலைநாட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  அதே சமயம் திட்டமிட்டபிடி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதை ஸ்பெயின் அரசால் தடு‌த்து நிறுத்திவிட முடியாது என்றும் கேட்டலோனியா தலைவர் கார்மே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com