ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் மகனின் ட்விட்டர் பக்கம்... டிரம்ப் இறந்துவிட்டதாக பதிவிட்டதால் பரபரப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாக, அவரது மகன் டொனால்ட் டிரம்ப் Jr-ன் X வலைதளப்பக்கத்தை ஹேக் செய்த சிலர் பதிவிட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் ஜேஆர்-டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் ஜேஆர்-டிரம்ப் முகநூல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பின் மகன் டொனால்ட் டிரம்ப் Jr. இவரது X வலைதளப்பக்கத்தில் நேற்று (செப். 20, 2023) ‘என் தந்தை டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டார்’ என பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து சில மணி நேரத்தில், “யாரோ ஒருவர் எனது X வலைதளபக்கத்தை ஹேக் செய்து என் தந்தை இறந்துவிட்டதாக அவதூறு கருத்துக்களை பரப்பியுள்ளனர்” என்று நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு தெரிவிதுள்ளார் டிரம்ப் Jr.

டீவீட்
டீவீட்x வலைதளப்பக்கம்

சுமார் ஒருமணி நேரம் வரை இருந்த அவரின் பழைய பதிவில், “எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நான் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

நேற்று காலை 8.25 மணிக்கு இப்பதிவு வெளியானது. தொடர்ந்து, அவரின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ சுரபியன் இது குறித்து விளக்கம் அளித்தார். அவர், "டொனால்ட் டிரம்ப் Jr.-ன் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது, அந்த இடுகை உண்மையானது இல்லை" என்று கூறினார். ஹேக் செய்யப்பட்ட Donald Trump Jr-ல் இன்னும் பல சர்ச்சை போஸ்ட்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பைடன், எலான் மஸ்க்கை சாடியும் பதிவுகள் இருந்தன.

பின் 8.46 மணியளவில் 77 வயதுடையை முன்னாள் அதிபர் டிரம்ப், தான் உயிருடன் இருப்பதாக தனது Truth Social என்ற வலைதளப்பக்கத்தில் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com