‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு’: உண்மையைப் போட்டு உடைத்த ட்ரம்ப் மகன்
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவரைச் சந்தித்துப் பேசியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஹிலரி கிளிண்டனுக்கு எதிரான தகவல்களைத் தருவதாக அவர் வாக்குறுதி அளித்ததாகவும் ட்ரம்ப் ஜூனியர் தெரிவித்திருக்கிறார். எனினும் வழக்கறிஞர் நடாலியா, முக்கியத் தகவல் எதையும் தரவில்லை எனவும் ட்ரம்ப் ஜூனியர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னரும், ட்ரம்பின் பரப்புரைக்குழுத் தலைவர் பால் மேனஃபோர்ட்டும் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ட்ரம்பின் பரப்புரைக் குழுவினர், ரஷ்யாவின் உதவியுடன் செயல்பட்டார்களா என்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.