திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்து பேச அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்க வேண்டும் என அவரின் பதவியேற்பு விழாவில் தேசிய கீதம் பாடிய பாடகி ஜாக்கி இவன்சோ கூறியுள்ளார்.
திருநங்கை மாணவர்கள் பள்ளிகளில் பாலின விருப்பப்படி கழிப்பறை மற்றும் குளியலறைகளை உபயோகிக்கலாம் என்ற ஒபாமா அரசின் உத்தரவை தற்போதைய ட்ரம்ப் அரசு ரத்து செய்துள்ளது. ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகை முன்பு கூடி திருநங்கை மாணவர்கள் ட்ரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது அவ்விழாவில் தேசிய கீதம் பாடிய பாடகி ஜாக்கி இவன்சோ ’திருநங்கைகள் உரிமை குறித்து பேச நானும், எனது தங்கையும் உங்களை (ட்ரம்ப்) சந்திக்க வேண்டும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.