\
பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
Published on: 

பயங்கரவாதிகளுக்கு தனது மண்ணில் புகலிடம் அளிப்பதை நிறுத்தத் தவறினால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

தலிபான் மற்றும் வேறு பயங்கரவாத குழுக்களுக்கு சொர்க்க பூமியாக திகழக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதாக, துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். 

தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக தன்னை அண்மையில் சந்தித்த ஆப்கானிஸ்தான் தலைவர்கள் புகார் தெரிவித்ததாக பென்ஸ் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பாகிஸ்தானை அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், தற்போது தானும் எச்சரிப்பதாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com