எலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசு ! மறந்துபோனதை நினைவூட்டிய ட்ரம்ப் மனைவி
எலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுந்துபோன நிலையில் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் அவருக்கு நினைவுப்படுத்தியுள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து அரசு மற்றும் ராணி எலிசபெத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரண்மனையில் அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டு பின்னர் ராணி எலிசபத் உடன் கலந்துரையாடினார்.
அப்போது ராணி எலிசபத் தனது அறையிலுள்ள பரிசுக்களை டொனால்ட் ட்ரம்பிற்கு காண்பித்தார். அதில் குதிரை சிலையை காண்பித்து ராணி ட்ரம்பிடம் இது அவருக்கு ஞாபகத்தில் உள்ளதா என கேட்டதாக தெரிகிறது. அதற்கு ட்ரம்ப் இது எனக்கு தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அப்போது ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் அது ராணிக்கு ட்ரம்ப் அளித்த பரிசு என்று அவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த குதிரை சிலையை ராணி எலிசபத் ஒரு வருடத்திற்கு முன் ட்ரம்ப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தச் சந்திப்பின் போது ராணி எலிசபத் வின்ஸ்டன் சர்ச்சில் 1959ஆம் ஆண்டு எழுதிய ‘இரண்டாவது உலக போர்’ என்ற புத்தக்கத்தை பரிசாக வழங்கியுள்ளார். இச்சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்து பயணம் சிறப்பாக தொடங்கியுள்ளது. ராணி மற்றும் மன்னர் குடும்பத்தின் வரவேற்பு சிறப்பாக இருந்தது. அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவு மேலும் வலுப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.