உலகம்
வட கொரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவுக்குதான் அதிகம்: ட்ரம்ப்
வட கொரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவுக்குதான் அதிகம்: ட்ரம்ப்
வடகொரியா விவகாரத்தில் என்ன நிகழ்ந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வடகொரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவுக்குதான் அதிகம் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு அதிக அளவில் இருப்பதாக தாம் நம்புவதாகவும், எனவே அவர் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். வடகொரியாவுடனான வங்கி சேவை, எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தகங்களை சீனா நிறுத்திக் கொண்டதற்காக நன்றி தெரிவித்த ட்ரம்ப், அடுத்து என்ன நிகழ்ந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகிவிட்டதாகவும் கூறினார். இதற்கு முன் வடகொரியா விவகாரத்தில் சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.