donald trump asks israel to stop bombing gaza
நெதன்யாகு, ட்ரம்ப், ஹமாஸ்எக்ஸ் தளம்

பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்.. காஸாவில் குண்டுவீச்சை நிறுத்தச் சொன்ன ட்ரம்ப்!

அமைதி திட்டத்தை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை அடுத்து, காஸா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published on
Summary

அமைதி திட்டத்தை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை அடுத்து, காஸா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை, போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்த நிலையில், காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஹமாஸுக்கு அரபு நாடுகள் வாயிலாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

donald trump asks israel to stop bombing gaza
ஹமாஸ், ட்ரம்ப்எக்ஸ் தளம்

இந்த நிலையில், காஸாவில் தங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், காஸாவின் நிர்வாகத்தை பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதற்கு எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. ஆனாலும், காஸா மீது குண்டுவீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

donald trump asks israel to stop bombing gaza
இஸ்ரேல் இறுதிக்கெடு.. வெளியேறும் காஸா மக்கள்.. தடுத்து நிறுத்தப்படும் நிவாரணப் படகுகள்!

ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். ஆகையால், காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ள அவர், ”இது காஸாவைப் பற்றியது மட்டுமல்ல; இது மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் வார்த்தைகள் நம்பிக்கையை விதைப்பதால், காஸாவில் நடைபெறும் போர், விரைவில் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. காரணம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரே சர்வதேச தலைவராக ட்ரம்ப் மட்டுமே உள்ளார்.

donald trump asks israel to stop bombing gaza
donald trumpsocila media

மேலும் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று பிடித்துச் சென்ற மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் படி, ஹமாஸ் தற்போது 48 பணயக்கைதிகளை வைத்துள்ளது, அவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

donald trump asks israel to stop bombing gaza
காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை.. வெளியேற உடனடி உத்தரவு பிறப்பித்த இஸ்ரேல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com