“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்

“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்

“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்
Published on

அமெரிக்க தேர்தலில் தலையிட வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நகைச்சுவையாக கூறினார்.

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ஒசாகா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒருவொருக்கொருவர் சந்தித்து ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது புதினிடம் ஆலோசனை நடத்திய ட்ரம்ப், 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தலில் ரஷ்யா தலையீட வேண்டாம் என புதினை கை நீட்டி கூறினார். அவர் கூறும் தொணி நகைச்சுவையாக இருந்தது. அதற்கு பதில் எதுவும் கூறாத புதின், அமைதியாக சிரித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில், ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். ஆனால் அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுதொடர்பாக சிறப்பு விசாரணையும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com