ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பனை சாமர்த்தியமாக காப்பாற்றிய நாய்! வைரல் வீடியோ!

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பனை சாமர்த்தியமாக காப்பாற்றிய நாய்! வைரல் வீடியோ!

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பனை சாமர்த்தியமாக காப்பாற்றிய நாய்! வைரல் வீடியோ!

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நாயை மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் துவக்கத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மரக்கிளையை எடுக்க நாய் ஒன்று செல்லும் காட்சியுடன் துவங்குகிறது. ஆனால், அதன் சமநிலையை இழந்து ஆற்றின் நீரோட்டத்தில் அந்த நாய் அடித்துச் செல்லப்படுகிறது.

அப்போது கரையில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நாய், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நாயை லாவகமாக காப்பாற்றியது. அதன் வாயில் கவ்விக்கொண்டிருந்த மரக்கிளையைப் பிடித்து மேலே தூக்கி சமயோசிதமாக அந்த நாயைக் காப்பாற்றும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

கேப்ரியல் கேனோ என்பவர் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. முதலில் அந்த நாய் குதிக்கக் காரணமான அந்த மரக்கிளையை வீசியது யார் என்பது குறித்த விவரங்கள் தற்போதுவரை கிடைக்கவில்லை. பலரும் ஐந்தறிவு உயிரான நாயின் காப்பாற்றும் குணம் குறித்து பாராட்டுகளை தெரிவித்த் வரும் நிலையில், சிலர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் வீடியோ எடுத்தவர் ஏன் தாமே முன்வந்து அந்த நாயை காப்பாற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com