‘உனது சேவை சூயஸ் கால்வாய்க்கு தேவை!’ நாயை பாராட்டிய நெட்டிசன்கள்!
உலகின் படு பிஸியான நிர்வழித் தடங்களில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் கடந்த ஆறு நாட்களாக கப்பல் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. இதற்கு காரணம் எவர்கிரீன் நிறுவனத்தின் எவரகிவ்வன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் குறுக்கு பக்கமாக தரை தட்டி நிற்பது தான்.
இந்நிலையில் ட்விட்டரில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீட்டின் தோட்டத்தில் நீரின் வேகத்திற்கு ஏற்ப மிக துரிதமாக வாய்க்கால் வெட்டி நீர் பாய்ந்து ஓட வழி செய்கிறது அந்த நாய். சுமார் 59 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு நொடி கூட அயராமல் நீரை தடியின்றி பயணிக்க தனது இரண்டு முன் கால்களையும் பயன்படுத்தி வாய்க்கால் வெட்டுகிறது அந்த நாய்.
இந்நிலையில் அந்த வீடியோவை டேக் செய்து சூயஸ் கால்வாயில் செய்வது அறியாமல் தவிப்பவர்களுக்கு உடனடியாக உனது சேவை தேவைப்படுகிறது என சொல்லி வருகின்றனர்.
சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கத்தினால் சுமார் 150 க்கும் மேற்பட்ட கப்பல்கள் எவர்கிவ்வன் கப்பலுக்கு முன்னும் பின்னுமாக காத்து நிற்கின்றன.