போனிடெயில் சிகை அலங்காரம் ஆண்களை பாலியல் ரீதியாக தூண்டுகிறதா? - ஜப்பான் பள்ளிகளில் தடை

போனிடெயில் சிகை அலங்காரம் ஆண்களை பாலியல் ரீதியாக தூண்டுகிறதா? - ஜப்பான் பள்ளிகளில் தடை
போனிடெயில் சிகை அலங்காரம் ஆண்களை பாலியல் ரீதியாக தூண்டுகிறதா? - ஜப்பான் பள்ளிகளில் தடை

போனிடெயில் சிகை அலங்காரம் ஆண்களை பாலியல் ரீதியாக உற்சாகப்படுத்துவதாக கூறி ஜப்பான் பள்ளிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பது இயல்பான விஷயம் தான். சில கட்டுப்பாடுகள் பொதுவானதாக இருக்கும். சில காட்டுப்பாடுகள் அந்தந்த நாடுகளை பொருத்து அந்தந்த பிராந்திய பகுதிகளை பொருத்து மாறும். அப்படித்தான் ஜாப்பான் நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒரு கட்டுப்பாடு புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டிற்கு சொல்லப்படும் காரணம் தான் வினோதமாக உள்ளது. 

பெண்கள் தனது தலைமுடியை வாரி ரப்பர் பேண்ட் மூலம் முடிந்து கொள்ளும் சிகை அலங்காரம் போனிடெயில் எனப்படும். இது பார்ப்பதற்கு குதிரை வால் போல காட்சியளிக்கும். இந்த போனி டெயில் சிகை அலங்காரம் ஆண்களை பாலியல் ரீதியாக தூண்டுவதாக கூறி ஜப்பான் பள்ளிகளில் தடை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”நான் எப்போதும் இந்த விதிகளை விமர்சித்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் இல்லாததாலும், அது மிகவும் இயல்பாகிவிட்டதாலும், மாணவர்களுக்கு அவற்றை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அந்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com