முடிவுக்கு வந்ததா ஹமாஸ்?

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய காசாவுக்கு பல்வேறு நிலைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அழிவை நோக்கி செல்கிறத ஹமாஸ்? இச்செய்தியில் பார்க்கலாம்...

வானில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணைகளால் நொடிப் பொழுதில் தரைமட்டமாகி கிடக்கும் வானுயர்ந்த கட்டடங்களை ஹமாஸ் முழுவதும் நம்மால் காணமுடிகிறது. தொடர்ந்து ஏவுகணைகளை வீசி காஸா நகரை நிலைகுலையச் செய்துள்ளது இஸ்ரேல். காஸாவின் ஹமாஸ் குழுவினர் ஏவுகணைகளை வீசியும், இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியும் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர்.

ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவாக லெபனான், சிரியாவில் உள்ள ஆயுதக் குழுவினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனை கண்டு வெகுண்டெழுந்த இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. காஸா மீது மிக ஆக்ரோஷத்துடன் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.

ஹமாஸ் போர்
முன்பைவிடவும் விவேகமான ஹமாஸ்... இஸ்ரேல் கோட்டை விட்டது எங்கே..!

காஸா நகரின் ஐந்து பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இருநூறு கட்டடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் குழுவினரின் பெரும்பாலான ஆயுதக் கிடங்குகள், தலைமை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவான் அபு ஷமாலா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹமாஸ் குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. போர் விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் காசா நகரில் 300க்கும் மேற்பட்ட கட்டடங்களை இஸ்ரேல் விமானப்படை தரைமட்டமாக்கியுள்ளது. ஒருபுறம் ஹமாஸ் குழுவினர் அதிகளவில் கொல்லப்படும் நிலையில், மறுபுறம் ஹமாஸ் குழுவுக்கான நிதி ஆதாரத்தை கண்காணிக்கும் அமைப்பையும் அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் போர்
பதற்றம்: இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்!

ஹமாஸ் குழுவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஹமாஸ் குழுவை சேர்ந்த 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலுக்கு பெருகும் ஆதரவால் ஹமாஸ் குழுவினர் பெருமளவில் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com