அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கண்ணில் 14 புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் இடது கண்களில் எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஈக்கள் மூலம் பரவும் தெலாஸியா க்ளோசா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரது கண்களில் இருந்து ஒரு அங்குலத்துக்கும் குறைவான அளவில் 14 புழுக்கள் எடுக்கப்பட்டது. தெலாஸியா க்ளோசா நோயால் பாதிக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்ற பெயர் கிடைத்துள்ளது.