ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக 2 கால்களை தானாக இழந்த மருத்துவர்; இறுதியில் காத்திருந்த டிவிஸ்ட்!
பிரிட்டனில் ட்ரூரோவைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான இவர, ராயல் கார்ன்வால் மருத்துவமனைகள் NHS அறக்கட்டளையில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 2019 ஆம் ஆண்டில் செப்சிஸால் (Sepsis) தனது கால்களை இழந்ததாக கூறி, 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.
டெவோன் மற்றும் கார்ன்வால் போலீசாரால் இரண்டரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு இவரது குற்றம் வெளிச்சத்து வந்தது.
மேலும், ரத்த நாள பிரச்னை இருப்பதாககூறி உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை அகற்றுவது எப்படி என்பது குறித்து ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2020 வரை, தி யூனச் மேக்கர் என்ற வலைத்தளத்திலிருந்து அவர் வீடியோக்களை பீரிமியம் முறையில் வாங்கியதாகவும், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு மருத்துவரின் உதவியுடன் இதனை எந்த பிரச்னையும் ஏற்படாமல் செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் தரகோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், ஆகஸ்ட் 26 அன்று ட்ரூரோ கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகும்படி அவருக்கு ரிமாண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
2023 ஆம் ஆண்டு பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், ஹாப்பர் உறுப்புகளை துண்டித்தல் பற்றிப் பேசியிருக்கிறார். அதில், "நான் நிறைய உறுப்புகளை துண்டித்தல் செய்கிறேன் . சாதரணமாக நடக்க சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என்று என்னிடம் சொன்னார்கள் . ஆனால், நான் அதை மூன்று மணி நேரத்தில் செய்தேன். நான் முன்பு இருந்ததை விட என் கால்கள் இல்லாமல் இருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.