
தென் மேற்கு பிரான்ஸில் 26 வயது நிரம்பிய திருநங்கை ஒருவர், தன்னுடைய ஆண் நண்பருடன் மகப்பேறு மருத்துவரான Victor Acharian கிளினிக்கிற்குச் சென்றுள்ளார். ஆனால், மருத்துவர் அவரைப் பார்த்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என உதவியாளரிடம் சொல்லி அனுப்பியுள்ளார். இதையடுத்து, கோபமடைந்த அந்த திருநங்கை, ’நீங்கள் எல்லாம் மூன்றாம் பாலினத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டவர்கள்’ என சத்தமிட்டபடி அங்கிருந்து வெளியேறியுள்ளார். தொடர்ந்த திருநங்கையின் வந்த ஆண் நண்பர், அந்த கிளினிக்கில் நடந்ததைக் குறித்து கூகுள் ரிவியூவில் புகாராகப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகாருக்குப் பதிலளித்துள்ள மருத்துவர் Victor Acharian, ‘உண்மையான பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க எனக்குத் தெரியும்’ எனப் பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்த திருநங்கைக்கு ஆதரவாக, ஐரோப்பாவிலுள்ள பல அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.