மெக்ஸிகோவில் ஃபைசர் தடுப்பூசி பெற்ற மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மெக்ஸிகோவில் ஃபைசர் தடுப்பூசி பெற்ற மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
மெக்ஸிகோவில் ஃபைசர் தடுப்பூசி பெற்ற மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மெக்ஸிகோவில் ஃபைசர் தடுப்பூசி பெற்ற மருத்துவர் கடுமையான உடல்நல பாதிப்புகள் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய பாதகமான எதிர்வினைக்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு மருத்துவர், வலிப்பு, சுவாசக் கோளாறுகள் மற்றும் என்செபலோமைலிடிஸ் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

"ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற 32 வயதான மருத்துவர், தடுப்பூசி போட்ட அரை மணி நேரத்திற்குள் உடல் தடிப்புகள், வலிப்பு, தசை பலவீனம் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்" என்று அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய பாதகமான எதிர்வினைக்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன, வீக்கத்தைக் குறைக்க அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com