கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசல் - டாக்டர் கைது!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசல் - டாக்டர் கைது!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசல் - டாக்டர் கைது!
Published on

கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக கூறி, தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தி பணம் வசூலித்து வந்த மோசடி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் நோயறிதல் மேம்பாட்டு மையத்தின் மருத்துவ நோயறிதல் ஆய்வக இயக்குநராக பதவி வகித்தவர் 33 வயதான குவா (QUAH). இவர் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை உடையவர். ஆனால் நாட்டின் கொரோனா தடுப்பூசி பதிவேட்டில் தான் ஒரு மருத்துவப் பயிற்சியாளர் என பதிவு செய்து தினமும் பலருக்கு தடுப்பூசி செலுத்தியதாக பதிவு செய்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கிளினிக்குகளுக்கு சென்று சோதனை செய்த போது அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின.

பல நாட்களாக அவர் தடுப்பூசியில் மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை வைத்து பொதுமக்களுக்கு செலுத்தி வந்துள்ளார். அவர்களிடம் தடுப்பூசி செலுத்தியதற்காக பணமும் வாங்கிவிட்டு, தடுப்பூசி பதிவேட்டில் அவர்கள் பெயரை பதிவேற்றி வந்துள்ளார். நோயாளிகளிடம் அவர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கான போலி சான்றிதழையும் கொடுத்து அவர்களை ஏமாற்றியுள்ளார். போலியாக நோயாளிகள் பெயரில் கணக்கை தொடங்கி, அந்த நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக முடிவுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவருக்கு உதவியாக இருந்துவந்த அவரது உதவியாளர் தாமஸ் சுவா செங் சூன் என்பவர் மீதும் சுகாதார அமைச்சகத்தை ஏமாற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. ஐரிஸ் கோ(46 வயது) என்பவர் நோயாளிகளை ஏமாற்றி, டாக்டர் குவாவிடம் செல்லும்படி பரிந்துரை செய்த நபர் ஆவார். இவர்கள் மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர் காவல் துறையினர். மேலும், டாக்டர் குவா நடத்திவந்த 4 கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.

தவறான தடுப்பூசி தரவுகளை சமர்ப்பித்து சுகாதார அமைச்சகத்தை ஏமாற்ற சதி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவரது நடவடிக்கைகள் பொது சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவர் தவறிவிட்டார் என்று சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. உப்புக் கரைசலை தடுப்பூசியாக செலுத்தி, அதற்கு கட்டணமும் வசூலித்த இந்த மூவர் கூட்டணியால் சிங்கப்பூர் சுகாதாரத்துறையே அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com