"ஷிப்ட் நேரத்திற்கு பிறகு பணியாற்ற வேண்டாம்" - சத்ய நாதெள்ளா

"ஷிப்ட் நேரத்திற்கு பிறகு பணியாற்ற வேண்டாம்" - சத்ய நாதெள்ளா
"ஷிப்ட் நேரத்திற்கு பிறகு பணியாற்ற வேண்டாம்" - சத்ய நாதெள்ளா

ஊழியர்கள் ஷிப்ட் நேரத்திற்கு பிறகு பணியாற்ற வேண்டாம் என்றும், இரவு நேர மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும், மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

வார்ட்டன் ஃபியூச்சர் ஆஃப் ஒர்க் என்ற மாநாட்டில் பேசிய அவர், தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும், எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் என்று கூறினார்.



தொழிலாளர்களின் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தொழிலாளர்கள் மென்மையான திறன்களை கற்று கொள்ள வேண்டும் என்றார். மேலும் வார இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும், அதற்கு பதிலளிக்க தேவையில்லை என்று சத்ய நாதெள்ளா தெரிவித்திருக்கிறார்.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com