கர்ப்பிணி மனைவி, சகோதரியா? டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்

கர்ப்பிணி மனைவி, சகோதரியா? டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்
கர்ப்பிணி மனைவி, சகோதரியா? டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்

தனக்கும் தனது கர்ப்பிணி மனைவிக்கும் தந்தை ஒருவர்தான் என்பதை அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ’எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம். எப்படி அறிந்துகொண்டோம் என்பது வேண்டாம். பிறகு இருவரும் தனித்தனியாக டி.என்.ஏ சோதனை செய்தோம். அதில் என் மனைவி ஒன்றுவிட்ட சகோதரி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் பள்ளியில் இருந்தே பழகி வந்தோம். பிறகு திருமணம் செய்துகொண்டோம். என் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இப்போது பிறக்கப் போகும் குழந்தைக்கு இதன் காரணமாக ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? உங்கள் ஆலோசனை தேவை’ என்று கூறியிருந்தார்.

’இதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள். எங்களுக்கு என்ன நடக்கும்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதை அப்படியே புதைத்துவிடவா?’ என்றும் அவர் கேட்டுள்ளார். 

இதற்கு ஏராளமானோர் பதில் அளித்துள்ளனர். அதில் ஒருவர், ’நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடம் சொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், ’இது உங்கள் அம்மாக்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லது. அதை தெரிவித்துவிடாதீர்கள். வருத்தப் படுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஏதும் ஆகுமா என்பது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்’ என்று தெரிவித் துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com