உலகம்
தற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி
தற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி
சிலி நாட்டில் தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் வீடியோ கேமை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக Blue Whale Challenge எனப்படும் ஆன்லைன் வீடியோ கேமில் விளையாடுபவர்கள், போட்டி முடிவில் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டியதாக, இந்த வீடியோ கேம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தடுக்கும் விதமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சிலி நாட்டு சைபர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.