\
குத்துச்சண்டை போட்டியால் மதுபான விடுதியில் தகராறு

குத்துச்சண்டை போட்டியால் மதுபான விடுதியில் தகராறு

குத்துச்சண்டை போட்டியால் மதுபான விடுதியில் தகராறு
Published on

மேவெதர், கானார் மேக்கிரிகோர் இடையிலான குத்துச்சண்டை போட்டியை மதுபானக்கடை டிவியில் பார்த்தபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பாட்டிலால் குத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மதுபான விடு‌தியில் டிவியில் ஒளிபரப்பான மேவெதர், கானார் மேக்கிரிகோர் இடையிலான குத்துச்சண்டை போட்டியை கண்டு ரசித்தபோது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 29 வயது இளைஞர் மதுபாட்டிலால் குத்தப்பட்டார்.

இதில்‌ கழுத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனும‌திக்க‌ப்பட்டுள்ளார். சுமார் 30 பேர் இந்த சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த குயின்ஸ்லாந்து காவல்துறையினர் கைகலப்பு ந‌டந்த மதுபான விடுதிக்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com