\
டிஸ்னி நிறுவனத்தின் மீது காப்பியடித்ததாக புகார்

டிஸ்னி நிறுவனத்தின் மீது காப்பியடித்ததாக புகார்

டிஸ்னி நிறுவனத்தின் மீது காப்பியடித்ததாக புகார்
Published on

அனிமேஷன் திரைப்படங்களில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ரசிகர்களுக்கு பிரமாண்டமாக வழங்கிய பெருமை வால்ட் டிஸ்னி நிறுவனத்தைச் சேரும். இவர்களின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி அடைந்த ஜூடோப்பியா (Zootopia) என்னும் திரைப்படம் தன்னால் உருவாக்கப்பட்ட கதை என்று ஹாலிவுட் எழுத்தாளர் கேரி கோல்ட்மேன் (Gary Goldman) புகார் கூறியுள்ளார். அதில் வரும் கதாப்பாத்திரங்களும், அதன் கதையும் தன்னால் டிஸ்னி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது என்றும், அதனை திருடியே ஜூடோப்பியா படத்தை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகவும் இவர் உரிமை கோரியுள்ளார். இதனை மறுத்துள்ள டிஸ்னி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயார் என சவால் விடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com