”எனக்கு எந்த வருத்தமும் இல்லை” - ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஜோ பைடன்!

”எனக்கு எந்த வருத்தமும் இல்லை” - ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஜோ பைடன்!
”எனக்கு எந்த வருத்தமும் இல்லை” - ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஜோ பைடன்!

”ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜோ பைடன், “அதில் எதுவும் இல்லை என்பதை நீங்கள் அறியத்தான் போகிறீர்கள். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்த விஷயத்தில் வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியதை நான் பின்பற்றுகிறேன். அதன்படியே செயல்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஜோ பைடன், தற்போது பதிலளித்திருப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அரசு சரியாகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தால் ஜோ பைடன் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவற்றில் என்ன இருந்தது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்றும், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com