\
Did Iran Rattle Trump? Is US Backing Down?
ட்ரம்ப் - மொஜ்தபாPt web

'ஒரு ஸ்டெப் நகர்ந்தால் அவ்வளவுதான்..’ ட்ரம்பை நடுங்கவிட்ட ஈரான்? அடங்கிப் போகிறதா அமெரிக்கா?

அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார் தலைநகர் தேஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தநிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் மாறிமாறி முரண்பட்ட கருத்து தெரிவித்ததால் குழப்பம் நீடித்து வருகிறது.
Published on: 

அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் இதனை செய்தே தீருவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள சம்பவம்தான் உலக தலைவர்களை அதிரவைத்துள்ளது. ஈரான் கூறியது என்ன? அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததா? விரிவாக பார்க்கலாம்..

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் இரு நாடுகளும் பல கோடிகள் வருமானத்தை இழந்துள்ளன. ஏராளமான ராணுவத் தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனைப் பொருட்படுத்தாத அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஈரானைச் சீண்டி வருகிறது. இருதரப்புக்குமான போர் 100 நாட்களைக் கடந்தும் நீடித்து வருவதால் பல்வேறு நாடுகளின் தலையீட்டால் தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மறுபக்கம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்திக்கொண்டுதான் வருகின்றன. இந்த நிலையில்தான் நிரந்தரமாகப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார் தலைநகர் தேஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தநிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் மாறிமாறி முரண்பட்ட கருத்து தெரிவித்ததால் குழப்பம் நீடித்து வருகிறது.

Did Iran Rattle Trump? Is US Backing Down?
ட்ரம்ப் - மொஜ்தபாPt web

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் தரப்பில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தேஹாவில் நாளை நடைபெறும் என பதிவிட்டுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்த அறிவிப்பை, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. வரும் நாட்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றும், ஈரான் குழு இந்த வாரம் கத்தாருக்கு பயணம் மேற்கொள்வது உண்மைதான். ஆனால், அமெரிக்கா அதிகாரிகளின் வருகைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம், அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தினால், அமைதிப் பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்திவிடுவோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com