உலகம்
ராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது
ராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகங்களை சிறிய டப்பாக்களில் அடைத்து கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு முன் இதே போன்று டப்பாக்களில் 20 ராஜ நாகங்களை ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டதால் அந்த கிங் கோப்ராக்கள் அனைத்தும் உயிரிழந்திருந்தன. இந்த குற்றச்சாட்டில் அவர் தண்டிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது.