பெண்களுக்கு எதிரான குற்றங்‌கள் அதிகரிப்பு: யுனிசெஃப்

பெண்களுக்கு எதிரான குற்றங்‌கள் அதிகரிப்பு: யுனிசெஃப்

பெண்களுக்கு எதிரான குற்றங்‌கள் அதிகரிப்பு: யுனிசெஃப்
Published on

உலகளவில் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகமாகவே காணப்படுவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்பாக ஐநாவின் யுனிசெஃப் அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச அளவில் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 7 கோடியே 90 லட்சம் மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக பள்ளிகளில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளனர். 15 முதல் 19 வயதுள்ள பெண்களில் ஒவ்வொரு 20 பெண்களில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குக்கு ஆளாகி இருக்கும் அதிர்ச்சி தகவலையும் யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் குழந்தைத் திருமணம் பாதியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள யு‌னிசெஃப், இருப்பினும் 30‌ சதவிகித பெண்களுக்கு 18 வயதுக்குள்ளாகவே திருமணம் நடைபெற்றுவிடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் தெற்காசிய‌ நாடுகளில் ஐந்தில் ஒரு பருவப் பெண் கணவர் அல்லது அவரது காதலரால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் 2016ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்களும், சிறுமிகளும் என்ற தகவலையும் யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com