”டெல்லி டூ லண்டன்” 70 நாட்கள் பேருந்து பயணம்.. ரூ15 லட்சம் கட்டணம்..: விவரம் உள்ளே?

”டெல்லி டூ லண்டன்” 70 நாட்கள் பேருந்து பயணம்.. ரூ15 லட்சம் கட்டணம்..: விவரம் உள்ளே?

”டெல்லி டூ லண்டன்” 70 நாட்கள் பேருந்து பயணம்.. ரூ15 லட்சம் கட்டணம்..: விவரம் உள்ளே?
Published on

இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பேருந்தில் பயணித்தால் எப்படி இருக்கும். நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறீர்களா, ஆனால் அதனை இங்கு ஒரு நிறுவனம் நினைக்கவும் முடியும், செயல்படுத்தவும் என்கிறது. ஆம் அட்வெஞ்சரஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பேருந்தில் சுற்றுலா செல்வதற்கான அறிவிப்பை அதனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நீண்ட பயணத்திற்காக அந்நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்தானது 18 நாடுகளின் வழியாக 20,000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 70 நாட்களில் நம்மை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று விடுமாம்.

மியான்மர் கட்டிடக்கலை, செங்கடூவில் உள்ள ராட்சத பாண்டாக்கள், சீனப்பெருஞ்சுவர், மாஸ்கோ, வில்நீயஸ், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட பல நகரங்களைச் சுற்றும் இந்தப் பேருந்து இறுதியில் லண்டன் செல்கிறது.

இந்நிலையில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் இணையதளம் இந்நிறுவனத்தின் உரிமையாளர் துஷார் அகர்வாலிடம் பேட்டி எடுத்தது. அதில் எது உங்களை இப்படி ஒரு பயணத்தை செய்ய வேண்டும் என உந்தியது என்று கேட்டதற்கு “ நாங்கள் சாலை வழி சுற்றுலாப் பயணங்களை கடந்த 8 வருடங்களாக செய்து வருகிறோம். கடந்த 2010 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து புறப்பட்ட நானும், சஞ்சய் மதனும் கிட்டத்தட்ட 50 நாடுகளை கடந்து 90000 கிலோமீட்டர்கள் பயணித்து கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.

அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்கு 27 நபர்களை அழைத்துச் சென்றோம். 13 கார்களில் சென்ற அந்த பயணமானது 18 நாடுகளை கடந்து இறுதியாக லண்டன் அடைந்தது.

இதே போன்ற பயணத்தை 2018,2019 ஆண்டுகளிலும் செயல்படுத்தினோம். அப்போது பயணிகள் இந்தப் பயணத்தில் நாங்கள் வாகனத்தை இயக்காமல் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தோம். ஐடியா வந்தது விட்டது அவ்வளதான்.

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கும், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கும் பயணம் மேற்கொள்வதற்கான காரணத்தைக் கேட்ட போது, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட கால வரலாறு இருப்பதாகவும், அதனால் தான் இவ்வழியான பயணத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என்று கூறினர்.

இந்தப் பயணத்திற்கு தயாராக நீங்கள் 6 மாதத்திற்கு முன்னர் டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும். இந்திய நாட்டு பாஸ்போர்ட்டுக்களுக்கான 10 விசாக்களை நிறுவனம் செயலாற்றும். ஒரு வேளை இந்த பயணத்திற்கு நீங்கள் தயாராகிறீர்கள் என்றால் உங்களது பாஸ்போர்ட் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை செல்லும் வகையிலும், பாஸ்போர்ட்டில் 20 பக்கங்கள் வெற்று காகிதங்களாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

70 நாட்களில் 25 நாட்கள் உங்களது பயணம் நடைபயணமாக இருக்கும். பேருந்தில் மொபைல் சார்ஜரில் ஆரம்பித்து இணையம்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கான கட்டணம் வெறும் 15 லட்ச ரூபாய் மட்டுமே. போலாமா..... 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com