தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா ஏன்? - ஆப்பிள் நிறுவன சிஇஓ அதிருப்தி

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா ஏன்? - ஆப்பிள் நிறுவன சிஇஓ அதிருப்தி
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா ஏன்? - ஆப்பிள் நிறுவன சிஇஓ அதிருப்தி

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநில  சட்டமன்றத்தில் சமீபத்தில் பெற்றோர் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வகுப்பறைகளில் மாணவர்கள் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் குறித்து விவாதிக்கக்கூடாது. இந்த நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், ''தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தின் பெருமைக்குரிய உறுப்பினராக, நாடு முழுவதும் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன், குறிப்பாக இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது இளைஞர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள், அவர்களை ஆதரிக்கும் குடும்பங்கள், நண்பர்கள் ஆகியோர் பக்கம் நான் நிற்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

டிம் குக் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆவார். முன்பொரு முறை டிம் குக் கூறுகையில், ''தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பது கடவுள் தந்த வரம். நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிக்க: தென்கொரிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com