”பாறைகள் தானாக நகர்கிறதா?”.. உலகின் அபாயகரமான மரணப் பள்ளத்தாக்கும், அவிழாத மர்மமும்!

”பாறைகள் தானாக நகர்கிறதா?”.. உலகின் அபாயகரமான மரணப் பள்ளத்தாக்கும், அவிழாத மர்மமும்!
”பாறைகள் தானாக நகர்கிறதா?”.. உலகின் அபாயகரமான மரணப் பள்ளத்தாக்கும், அவிழாத மர்மமும்!

கிழக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள டெத் வேலி பூங்கா ( இறப்பு பள்ளத்தாக்கு) என்று பெயர். இதற்கு ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்..

1849- ஆம் ஆண்டு தங்க வயல் தேடி வந்த ஐரோப்ப அமெரிக்கர்களில் ஒரு குழுவினர் வழி தவறி இங்கு வந்து இறந்துவிட்டதால், இவ்விடத்திற்கு டெத் வேலி என்று பெயரிடப்பட்டதாக கூறுகிறார்கள். 3,373,063 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்தப் பகுதி. அமெரிக்கா கண்டத்திலேயே உள்ள சூடான, காய்ந்த இடமாகும். டெத் வேலி சுற்றுவட்டாரத்தில் போராக்ஸ் தாது தோண்டப்பட்டதால் சில வருடங்கள் இவ்விடம் பிரபலமாக இருந்தது. டெத் வேலியில் உள்ள உப்பளங்கள், பல வகை உப்புகளுக்கும், போராக்ஸ், ஹைட்ரேட் போன்ற தாது பொருட்களுக்கும் பெயர் போனதாம்.

சரி, அவர்கள் ஏன் இங்கு வந்து இறந்தார்கள்?

முக்கியமான காரணம், இப்பிரதேசம் அதிகபட்ச வெப்பநிலையை கொண்டது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இந்த பகுதியில் நடந்து செல்வதே நெருப்பில் இறங்கி நடப்பதை போல் இருக்குமாம். கடந்த 300 ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதத்தில் 110 முதல் 125 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இரவு நேரத்தில் சற்று குறைந்து 90 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. 1913-ம் ஆண்டின் ஜூலை 10-ம் தேதி பூமியின் அதிகபட்ச வெப்பநிலை 134 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. இருந்தாலும், அவ்வளவு சூடான வெப்பநிலையிலும் கூட பல வகை உயிரினங்கள் இந்த பூங்காவை தங்களின் உறைவிடமாகக் கொண்டுள்ளன. இதில் வண்ணமயமான பாறைகள் மற்றும், பேட்வாட்டர் பேசின் உப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள, டெலஸ்கோப் பீக் டிரெயில் பைன் மரங்களைக் கடந்து மெஸ்கைட் பிளாட் மணல் குன்றுகளுக்கு சென்றால், அங்கு (ராட்டில் ஸ்னேக்ஸ் ) நச்சு பாம்புகள் வாழ்கின்றன.

இன்னும் ஒரு அதிசயதக்க செய்தி என்ன என்றால், இந்த பள்ளத்தாக்கில் உள்ள கற்கள் பெரிய பாறைகள் நகர்ந்து கொண்டே இருக்குமாம்.

இந்த டெத் வேலி என்கிற மரண பள்ளத்தாக்கில் மணல் பரப்பில், ஆயிரக்கணக்கான கற்கள் தானாக தன்னந்தனியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அதிர்ச்சி தகவல் 1948ல் வெளியாகியது. அதிக வெப்பம் கொண்ட இப்பகுதியில் ஒரு ஆள் நடமாட்டமோ புழு பூச்சி இல்லாத நிலையில் மணல் பரப்பில் இந்த கற்கள் ஏன் நகருகின்றன? எதற்காக நகருகின்றன? எப்படி நகருகின்றன என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இங்கு படையெடுக்க ஆரம்பித்தனர். ஆராய்சி தீவிரம் அடைந்தது. ஆனால் அதற்கான விடைகள் இன்று வரை தெரியவில்லை.

இங்குள்ள பாறைகள் மூன்று ஆண்டுகளில் அப்பிரதேசத்தையும் முழுதையும் சுற்றி வருகிறதாம். இது அந்தக் கற்கள் பணிக்கும் பாதை சுவடை வைத்தே அடையாளம் தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்து, சமமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறதாம். சில சமயங்களில் ஒவ்வொன்றும் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கிறதாம். சில சமயம் வந்த திசையிலேயே திரும்பி பயணிக்குமாம். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால் இதன் நகர்வுக்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது.

சரி இந்த பாறைகளும் கற்களும் எங்கிருந்து வந்திருக்கும்?

அதுதான் ஆச்சரியம். இந்த பள்ளத்தாக்கிற்கு அருகில் ஒரு மலை இருக்கிறது. அந்தமலையில் இருந்து விழும் கற்களே இந்த மணல் பரப்பில் நடக்கிறது. மலையில் இருந்து விழும் சில கற்கள் 10 ஆயிரம் அடி வரை நகர்கின்றது. சில கற்கள் சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகர்கின்றது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்கும் தொடர்புகள் இல்லை. இங்கு மணல் பரப்பில் கற்கள் மர்மமாக நகர்வதற்கு காரணம் இந்த பாலைவனத்தின் அமைப்பா? அங்குள்ள களி மண் காரணமா? காற்றின் வேகத்தினால் தள்ளப்படுகிறதா? மேலே சொன்ன எந்தக் காரணமும் அதற்கு சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com