\
தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு!

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு!

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு!
Published on

தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 136 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக அந்த படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 100 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, ஏரியில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com