வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளது.

