சோமாலியா கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
சோமாலியாவில் நடந்த கார் குண்டு தாக்குதலில் பலியானோர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
சோமாலியா நாட்டில் உள்ளது மொகாதிஷூ நகர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் வெளியே 4 கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த பின் காயமடைந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வந்தது.
இதனை தொடர்ந்து 4 வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியாயினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் அவர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக் கும் என்று கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளை இலக்காக கொண்டு நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு அல் ஷபாப் என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.