உலகம்
அமெரிக்காவில் ஹார்வீ புயலுக்கு உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் ஹார்வீ புயலுக்கு உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் ஹூஸ்டனை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 17 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதால் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி அவர்கள் உயிரிழந்தார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானவர்களை உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து தேடி வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று புயலால் தூக்கி வீசிப்பட்டு தடுப்புகளை தாண்டி கவிழ்ந்து கிடந்ததை இன்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பயணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.