பொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு!

பொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு!

பொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு!
Published on

கிறிஸ்துமஸ் பரிசாக மகளுக்கு 35அடி உயர கிரிஞ்ச் பொம்மையை தந்தை ஒருவர் தவறுதலாக ஆர்டர் செய்த சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டியுள்ளது. பல நாடுகள் தற்போதுதான் கொரோனாவில் மீண்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாட ஆர்வம் கொண்டுள்ளன. பலரும் தங்களுடைய அன்பானவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸை வரவேற்று வருகின்றனர். அப்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த ரே லிட்டல் என்ற நபர் தன்னுடைய செல்ல மகளுக்காக பொம்மை ஒன்றை ஆர்டர் செய்தார்.

இந்திய ரூபாய் மதிப்பில் அந்த பொம்மை ரூ.50ஆயிரத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் அந்த தந்தை பொம்மையின் அளவை சரியாக கவனிக்கவில்லை. ஆர்டர் செய்த பொம்மை வரும், வீட்டுக்குள் வைத்து விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு மிகப்பெரிய பார்சல் வீட்டுக்கு வந்தது. அதனை பார்த்ததும் லிட்டலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

லிட்டல் ஆர்டர் செய்தது சின்ன பொம்மை அல்ல 35 அடி உயர பொம்மை. வீட்டை விடவும் பெரிய பொம்மையை வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வெளியே வைத்து கொண்டாடினார் லிட்டல். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வைரலாக பரவ, பலரும் வந்து 35 அடி உயர பொம்மை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் சிறிய சுற்றுலாதலமாகவே மாறியது லிட்டலின் வீடு. வீட்டுக்கு வரும் கூட்டத்திடம், சமீபத்தில் உயிரிழந்த தன்னுடைய தந்தை நினைவாக தொண்டு நிறுவனத்துக்கு பணம் வசூலையும் லிட்டல் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 8000ஆயிரம் டாலருக்கு மேல் பணம் வசூலாகியுள்ளதால் லிட்டல் மகிழ்ச்சியில் உள்ளார். கிட்டத்தட்ட 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர் வீட்டுக்கு வருகை தந்ததாக லிட்டல் தெரிவித்துள்ளார். கொண்டாட்டத்துக்காக வாங்கப்பட்ட பொம்மை உண்மையிலேயே மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு வழிசெய்துவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளனர் லிட்டல் குடும்பத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com