\
தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் விபத்து..  படுகாயம் அடைந்த சைக்கிளிங் வீரர்கள்.!

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் விபத்து.. படுகாயம் அடைந்த சைக்கிளிங் வீரர்கள்.!

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் விபத்து.. படுகாயம் அடைந்த சைக்கிளிங் வீரர்கள்.!
Published on

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் காற்றடித்து சைக்கிளிங் வீரர்கள் சரிந்து விழுந்து காயமடைந்தனர்.

இத்தாலியில் புகழ்பெற்ற ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. சமதளப் பகுதி, மலைச்சாலை என பல்வேறு பகுதிகளில், வீரர்கள் பந்தய தூரத்தை சைக்கிள்களை ஓட்டி கடக்க வேண்டும்.

இந்நிலையில் இப்போட்டியின் நான்காம் சுற்று முடிவில் வீரர்கள் சைக்கிளில் மேம்பாலம் ஒன்றில் கடந்து சென்று கொண்டிருந்த போது, வான் வழியாக வந்த ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றுள்ளது.

இதனால் பலத்த காற்று வீசியதில் லூகா வக்கர்மேன் மற்றும் எட்டியென் வான் எம்பல் என்ற இரண்டு வீரர்கள் சைக்கிளில் இருந்து நிலைகுலைந்து விழுந்தனர். இதில் வக்கர்மேனுக்கு முதுகெலும்பு முறிந்து, பலத்த படுகாயமடைந்தார். எட்டியென் வான் எம்பலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com