உலகம்
கத்தார் மீது சைபர் தாக்குதல்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு
கத்தார் மீது சைபர் தாக்குதல்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு
விதிகளை மீறி அரசின் செய்தி ஊடகத்திற்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடுருவியது துரதிஷ்டவசமானது என கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமர்சித்துள்ள கத்தார் அரசு, இந்த சைபர் தாக்குதல் அவமானகரமானது. சர்வதேச மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் விதிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீறியுள்ளது எனக் கூறியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கத்தார் நாட்டு செய்தி ஊடகத்திற்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த மே மாதம் ஊடுருவியதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் கூறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கத்தார் நாட்டுடனான உறவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் முறித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.