90 லட்சம் பில்... டிப்ஸ் மட்டும் 20 லட்சம்!
90 லட்சம் பில்... டிப்ஸ் மட்டும் 20 லட்சம்!Twitter

90 லட்சம் பில்... டிப்ஸ் மட்டும் 20 லட்சம்! எங்கே நடந்தது இந்த சுவாரஸ்யம்?

துபாயில் உள்ள நட்சத்திர உணவகத்தில் வாடிக்கையாளரின் 90 லட்சம் ரூபாய் பில் காண்போரை வாய்பிளக்க செய்துள்ளது.
Published on

துபாயில் உள்ள பிரபல FOUR SEASON ரெசார்ட்டில், கடந்த 20ஆம் தேதி இரவு உணவுக்காக வந்த வாடிக்கையாளர்கள் சிலர் மாட்டிறைச்சி, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட உணவுகள் தொடங்கி மதுபானம் வரை பலவகை உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர்.

டிப்ஸ் மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த பில்-லின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரெசார்ட் நிறுவனம், "பணம் வரும்.. போகும்" என குறிப்பிட்டுள்ளனர். வறுமையில் பலர் பசியுடன் இருக்கும் இந்த உலகில், 90 லட்சம் ரூபாய்க்கு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து வீணாக்குவது வருத்தம் அளிப்பதாக சிலரும், உணவகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக இருப்பதாக சிலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com