மசூதியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு

மசூதியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு

மசூதியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு
Published on

கனடாவின் கியூபக் நகரில் மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் ‌நடத்திய‌ துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

கனடாவின் கியூபக் நகரில் மசூதி ஒன்றில் இரவு 8 மணி அளவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது

மசூதியினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற மசூதி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com