சிட்னி வந்த சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா உறுதி

சிட்னி வந்த சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா உறுதி
சிட்னி வந்த சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா உறுதி

நியூசிலாந்தில் இருந்து 4,600 பயணிகளுடன் ஆஸ்திரேலியா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து நாட்டிலிருந்து  4,600 பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்களுடன் மெஜஸ்டிக் பிரின்சஸ் சொகுசு கப்பல் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே சர்குலர் குவேவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது வழக்கம்போல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியானதில், கப்பலில் இருந்த 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மிக லேசான அறிகுறிகளே இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொற்று கண்டறியப்படாத மற்ற பயணிகள் கப்பலில் இருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதேபோல், கடந்த 2020இல் ஆஸ்திரேலியாவுக்கு வந்த ரூபி பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் 900 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதில் 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com