கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கப்பல் மோதல்: வெனிஸில் பரபரப்பு
வெனிஸ் நகரில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கப்பல் படகு நிறுத்தும் இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இத்தாலியின் சுற்றுலா தளமான வெனிஸ் நகரில், உள்ளது கியுடெக்கா கால்வாய் (Giudecca Canal). கால்வாய்களின் நகரம் என அழைக்கப்படும் இங்கு ஏராளமான சுற்றுலா படகுகளும் கப்பல்களும் வந்து செல்வது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை இங்கு சுற்றுலா படகு ஒன்று பயணிகள் முனையத்தில் நின்றிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் எம்எஸ்சி ஒபரா என்ற பிரமாண்ட சொகுசு கப்பல் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதில் 2 ஆயிரத்து 679 பயணிகள் இருந்த னர். 275 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்ட பிரம்மாண்ட சொகுசு கப்பல் அது.
கட்டுப்பாட்டை இழந்ததால், அந்தக் கப்பல் தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே வந்தது. பயணிகள் முனையத்தில் நின்றிருந் த சுற்றுலா பயணிகள், அந்தக் கப்பலையும் அதன் சத்தத்தையும் கேட்டு சிதறி ஓடினார். அதற்குள் அந்த கப்பல் அங்கு நின்றிரு ந்த படகு மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் படகில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, வெனிஸில் பெரிய கப்பல்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.